பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜகவின் போராட்டம் நாடகமாகவும், ஏமாற்றமாகவும் இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணைக்கு சீமான் உள்பட மூவரும் ஆஜராகினர். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீமான், ஜெய்பீம் பிரச்னை முற்றுப்பெற்ற விவாதம் எனக் கூறிய அவர் தொடர்ந்து.....
சென்னையில் மழை வெள்ளம் வடியவில்லை, இடிந்தகரையில் அணுக்கழிவு புதைப்பது போன்ற பிரச்னைகள் உள்ள நிலையில், இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வேளாண் சட்டத்தை ரத்து செய்தது 5 மாநில தேர்தலுக்காக அறிவித்ததுபோல் இருக்கிறது. சட்ட வரைவாக அதனை உறுதி செய்யவேண்டும்” என்றவர், பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு போராடுவது நாடகமாகவும் ஏமாற்றாகவும் உள்ளது.
வெள்ள பாதிப்பில் திமுக அரசு, வடியாத தண்ணீர்போல இருக்கிறது. வனப்பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு ஏற்கிறதா எதிர்க்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். வேளாண் சட்டம்போல வனப்பாதுகாப்பு சட்டமும் கொடியது. ஆன்லைனில் வகுப்பு நடத்தியிருப்பதால் மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு கேட்பது நியாயம்" தான் என்றார்.