ரயில் மோதி 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு: தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்-Train collision kills more than 20 goats: Awful while trying to cross the tracks

தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆடுகள் மீது ரயில் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

ராணிப்பேட்டை மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவருக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக பின்னாவரம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து தோப்புக்கு ஓட்டி சென்றுள்ளார்.

image

அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயில் ஆடுகள் மீது மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உடல் சிதறி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள ஆடுகள் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

image

செம்மறி ஆடுகள் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



More than 20 sheep were killed when a train collided with sheep trying to cross the tracks.

Mani hails from the Chennamangalam area of ​​Ranipettai district. He has crossed the railway track in Pinnavaram area to graze more than a hundred sheep belonging to him and drove them to the grove.

The electric train from Kanchipuram to Arakkonam collided with the goats and more than 10 goats were found scattered on the spot, while the rest died on the way to the veterinary hospital.

Chengalpattu Railway Police have registered a case and are investigating the incident in which a train collided with a sheep.

Post a Comment

Previous Post Next Post