விறுவிறுப்புடன் நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு - 2வது சுற்று நிலவரம்

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 2 சுற்றுகள் முடிவடைந்துள்ளன.

பாலமேட்டு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று முடிவில் ( 1st Batch )வாடிவாசலில் இருந்து 81 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. முதல் சுற்றில் 22 காளைகள் பிடிபட்ட நிலையில் 59 காளைகள் பிடிபடவில்லை. இரண்டாம் சுற்று முடிவில் (2nd Batch) முடிவில் வாடிவாசலில் இருந்து இதுவரை மொத்தம் 176 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

image

2 வது சுற்றில் 95 காளைகள் வெளியேறி உள்ள நிலையில் 25 காளைகள் பிடிபட்டுள்ள 70 காளைகள் பிடிபடவில்லை. முதல் இரண்டு சுற்று முடிவில் 47 காளைகள் பிடிபட்ட நிலையில் 129 காளைகள் பிடிபடவில்லை. முதல் இரண்டு வீரர்கள் தலா 5 காளைகள் பிடித்துள்ள நிலையில், இருவரும் சமநிலையில் தொடர்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post