திருவள்ளுவர் திருநாள் - மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, திருக்குறள் ஓவியக் காலபேழை புத்தகத்தை ஸ்டாலின் வெளியிட்டார். அதோடு குறளோவியம் போட்டியில் பங்பேற்று வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ50ஆயிரம், 2ம் பரிசாக ரூ.30ஆயிரம், 3ம் பரிசாக ரூ.20ஆயிரம் வழங்கினார். குறளோவியம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 3 கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றதழ்களை முதல்வர் வழங்கினார்.

image

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனின் 8வயது பேத்தி மகிழினி எழுதிய The Adventures of Shing and Shang in Mystery Island என்ற ஆங்கில புத்தகத்தை முதலமைச்சர் வெளியிடுகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post