காதலிக்கு காதலர் தின பரிசு கொடுக்க ஆடு திருடிய காதலன்! உறுதுணையாக இருந்த நண்பனும் கைது

காதலர் தினத்தை கொண்டாடி காதலிக்கு பரிசு வாங்குவதற்காக ஆடு திருடிய கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மலையரசன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகா. ஆடுகளை வளர்த்துவரும் இவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் இருந்து, சில தினங்களுக்கு முன் ஆடு ஒன்றை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் எடுத்துச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

image

அவர்கள் ஆட்டை திருடி செல்வதை கண்டவுடன், `திருடன் திருடன்’ என ரேணுகா கத்தி கூச்சலிட்டிருக்கிறார். இதனால் அருகில் இருந்தவர்கள் ஆட்டை திருடிச் சென்றவர்களை விரட்டிப்பிடித்துவிட்டனர். அப்போது கல்லூரி மாணவன் அரவிந்த்குமார் (20) மற்றும் அவரது நண்பன் மோகன் (20) ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் மக்கள் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அரவிந்த்குமார் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கும் தன் காதலிக்கு காதல் பரிசு வாங்குவதற்கும் பணம் இல்லாததால் ஆட்டை திருடியதாக கூறியுள்ளார். அதற்கு உடந்தையாக அவரது நண்பர் மோகன் செயல்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

image

கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற ஆடு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுவருவதால், மக்கள் சற்றே அதிர்ச்சியில் உள்ளனர். பிற ஆடு திருட்டு சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post