“பள்ளியின் மீதுதான் சந்தேகம்” - உயிரிழந்த கரூர் மாணவியின் தாயார் பரபரப்பு பேட்டி-"Suspicion on the school" - the mother of the deceased Karur student sensational interview

பள்ளியின் மீதுதான் சந்தேகம் உள்ளது என பாலியல் சீண்டலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார் புதிய தலைமுறையிடம் கூறினார்.

கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில், “பாலியல் வன்கொடுமையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும். எனக்கு யார் இந்த கொடுமையை செய்தார்கள் என்று வெளியே சொல்லவும் பயமாக உள்ளது” என்ற ரீதியில் கடிதம் ஒன்று எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவி உயிரிழப்பு தமிழக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக மாணவியின் தாயார் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “எனது மகள் உயிரிழந்த பிறகு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றோம். அப்போது அங்கிருந்த காவலர்கள் எங்களது உறவினர்கள் 3 பேரையும் தாக்கினர். புகார் அளிக்கச் சென்ற 3 பேரையும், என்னையும் விடியற்காலை 5 மணி வரை காவல் நிலையத்திலேயே உட்கார வைத்து விட்டனர்.

அதன் பிறகே நாங்கள் மருத்துவமனைக்கு சென்றோம். காலை 10 மணிக்கெல்லாம் பிரேத பரிசோதனை முடிந்த பிறகும் எங்களை பாப்பா முகத்தை பார்க்க விடாமல் வேகமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் பள்ளி மீது தான் எனக்கு சந்தேகமாக உள்ளது. பாப்பா காரியங்களை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த பிறகுதான் கெமிஸ்ட்ரி பேப்பர் எல்லாம் கிழித்துப் போட்டு இருந்ததால் எங்களுக்கு சந்தேகம் வந்தது.

image

பாப்பா ஒருநாள் கூட பள்ளிக்கு செல்லாமல் இருந்ததில்லை. ஆனால், கெமிஸ்ட்ரி பாடம் வரும் நாளெல்லாம் பள்ளிக்கு செல்ல பயந்தாள். ஆசிரியர் ஒருவர் தகாத வார்த்தையை அதிகமாக பயன்படுத்தி மாணவர்களை திட்டுகிறார் எனக் கூறினாள். பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடக்கும். அப்போது எல்லா பெற்றோரும் வந்து கேட்டால் நன்றாக இருக்கும் எனக் கூறினாள். என்னை தகாத வார்த்தைகளால் பேசினால் நான் எதிர்த்துப் பேசி விடுவேன் என்று தைரியமாக கூறினாள். போலீசார் விசாரணையில் எங்களை யாரும் மிரட்டவில்லை. விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக தான் போலீசார் என்னிடம் கூறினார்” என உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார். 


The mother of a student who committed suicide by hanging herself after being sexually assaulted told the new generation that the school is under suspicion.

A school student from Karur committed suicide by hanging himself at home yesterday. He was then writing a letter. "I want to be the last woman to die of sexual abuse. I'm afraid to tell anyone who did this atrocity. ”He committed suicide by hanging himself.

The death of a school student has caused a stir in Tamil Nadu. In an interview with New Generation, the mother of the student said, “We went to the police station to lodge a complaint after my daughter died. The guards who were there at the time attacked all 3 of our relatives. The 3 people who went to lodge a complaint and me were kept in the police station till 5 in the morning.

After that we went to the hospital. After the autopsy was completed at 10 a.m., they loaded us into a speeding vehicle without letting us see Papa's face. Thus the school is just skeptical of me. It was only after Papa finished things and came home that we became suspicious because the chemistry paper was all torn up.

Papa never went to school even one day. But she was afraid to go to school every day when the chemistry lesson came. She said a teacher used too much inappropriate language to scold students. A parent-teacher meeting will be held at the school.

Then she said it would be nice if all the parents came and asked. She boldly said that if she spoke to me in inappropriate words I would resist. None of us were intimidated during the police investigation. The police told me the investigation was ongoing, "said the woman's mother.

Post a Comment

Previous Post Next Post