பேருந்தை வழிமறித்த 'படையப்பா' காட்டு யானை: சாதுர்யமாக பயணிகளை காப்பற்றிய ஓட்டுநர்

உடுமலை மூணாறு சாலையில் பேருந்தை வழிமறித்த படையப்பா காட்டு யானை. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூணாறு சாலையில் படையப்பா என பெயர் சூட்டப்பட்ட காட்டு யானை கடந்த சில நாட்களாக மூணார் தேயிலை தோட்டத்திற்குள் வேனை கவிழ்த்தியது. பொதுமக்கள் இருக்கும் இடத்தில் அதிகளவில் சுற்றித் திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

image

இந்நிலையில், மூணார் சாலையில் பேருந்தை வழிமறித்த காட்டு யானை முன்பக்க கண்ணாடியை தந்தத்தால் முட்டி தாக்கியது. ஆனால் ஓட்டுனர் சிறிதும் அச்சப்படாமல் சாதுர்யமாக பேருந்தை இயக்கி கடந்து சென்றார்.

இந்த காட்சி பேருந்திலிருந்த பயணி ஒருவரால் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post