நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் மணமக்களுக்கு நண்பர்கள் பெட்ரோல் டீசலை பரிசாக வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரேஷ்குமார் மற்றும் கீர்த்தனா தம்பதிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், திருமணம் என்றாலே வித்தியாசமான முறையில் நண்பர்கள் மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம்,
ஆனால், உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை குறிக்கும் வகையில் மணமக்கள் இருவருக்கும் அவர்களுடைய நண்பர்கள் 1 லிட்டர் பெட்ரோல் 1 லிட்டர் டீசலும் பரிசாக அளித்தனர். தினம் தினம் தங்கத்திற்கு நிகராக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வருவதால் மணமக்களுக்கு பெட்ரோல், டீசலை பரிசளித்தாக நண்பர்கள் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News