தண்ணீர் வசதியில்லாத மலை கிராமத்திற்கு தண்ணீர் தொட்டி வழங்கிய கோவை சரக டிஐஜி

பழங்குடியின மக்களுக்கு கோவை சரக டிஐஜி முத்துச்சாமி தண்ணீர் தொட்டிகளை வழங்கினார்.

கோவை சரக டிஐஜி முத்துச்சாமி நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். கூடலூர் அருகே உள்ள முருக்கம்பாடி பழங்குடியின கிராமத்திற்கு நேரில் சென்ற அவர், மக்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது தண்ணீர் வசதி இல்லாத ஊர் மக்களுக்கு காவல் துறை சார்பாக தண்ணீர் தொட்டிகளை வழங்கினார்.

image

இதையடுத்து பழங்குடியினர் மத்தியில் உள்ள குழந்தை திருமணம், குடிப்பழக்கம், கல்வி இடை நிற்றல் உள்ளிட்ட விஷயங்களை களைவதற்கான முயற்சிகளை காவல்துறை மேற்கொள்ளும் என பழங்குடியின மக்கள் மத்தியில் உறுதியளித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post