நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் கால நிர்ணயம் சொல்ல மறுத்தது பற்றி முரசொலி நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது .
இது குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியாகியுள்ள விமர்சனத்தில், " தனக்கு இருக்கும் கடமையை செய்யாமல் தமிழ்நாடு ஆளுநர் என்.ஆர்.ரவி அவசியமற்ற அரசியல் செய்துகொண்டிருக்கிறார். ஒருவேளை தமிழ்நாடு பாஜகவின் தலைமைப் பொறுப்பை தானே கவனிக்கலாம் என ஆளுநர் நினைக்கிறாரா?
தன்னை அவர் ஜனாதிபதியாக நினைத்துக்கொள்கிறார் போலும். சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டியது அவரது வேலையே தவிர, ஊறுகாய் பானையில் ஊற வைப்பது அவரது வேலை இல்லை.
பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றையணா ஓட்டுக்கும் உலைவைக்க ஆளுநர் ரவி முடிவு எடுத்துவிட்டாரா? யாரோ சிலரால் ஆளுநர் தவறாக நடத்தப்படுகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியாகும், அதைப் புரிந்தும் தெரிந்தும் தெளிந்தும் செயல்பட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News