இன்டிகோ விமானத்தில் வித்தியாசமான முறையில் தமிழ் மாதங்கள் குறித்த கவிதை வாசித்து தமிழ்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த விமான ஊழியரின் வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி புறப்பட்ட இன்டிகோ விமானம் ஒன்றில் ஏராளமான பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அப்போது விமானத்தை இயக்கிய பின் விமான நிலைய ஊழியர் வரவேற்பு அறிவிப்பின் போது பயணிகளுக்கான நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழ் மாதங்களை கவிதை நடையில் வாசித்த விமான ஊழியரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விமான நிலைய ஊழியர் தமிழ் மாதங்கள் குறித்து கவிதை வாசிக்கும்போது சித்திரை திருவிழா குறித்தும், கள்ளழகர் எழுந்தருளல் குறித்தும் ஒவ்வொரு தமிழ் மாதங்களில் நடைபெறும் விழாக்கள் குறித்தும் தமிழ்மொழி உச்சரிப்போடு வாசித்தார்.
விமானங்களில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே அறிவிப்பு செய்யப்படும் நிலையில் விமானத்தில் தமிழில் அறிவிப்பை அருமையாக தொகுத்த ஊழியருக்கும் இன்டிகோ விமான நிறுவனத்திற்கும் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News