சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.
ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். 13 நாடுகளில் இருந்து 183 வீரர்கள் பங்கேற்ற செஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் முன்னிலை வகித்தார். 9 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், ஒன்றில் கூட குகேஷ் தோல்வியடைவில்லை. 7 வெற்றி, இரண்டு டிரா என மொத்தம் 8 புள்ளிகளுடன் அவர் முதலிடம் பிடித்தார்.
மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா மூன்றாவது இடம் பிடித்தார். சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள 15 வயதான குகேஷ்-க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காததையும் முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்றாவது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்: 'ஆண் குழந்தை மரணம்' - கிறிஸ்டியானா ரொனால்டோவை கலங்க செய்த பேரிழப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News