தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகளின் பட்டியல் விரைவில் வெளியாகவுள்ளது.
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின், கட்சி நிர்வாகிகளில் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, நிர்வாகிகளின் பட்டியலில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சரியாக பணி செய்யாத எட்டு மாவட்ட பாஜக தலைவர்களை மாற்றி அமைத்து, அதற்கு பதிலாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் 30ஆம் தேதி பாஜகவின் மாநில குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த கூட்டத்திற்கு பிறகு, மாநில நிர்வாகிகளின் பட்டியலில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பாஜகவில் உள்ள மாவட்ட தலைவர்கள் அணி பிரிவு நிர்வாகிகளின் பட்டியலும் மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News