அமராவதிபாளையத்தில் பனியன் வேஸ்ட் குடோனில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தல் ரூ.30 லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர், செவந்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சௌலாவுதீன். இவர், திருப்பூர் - தாராபுரம் சாலை, அமராவதிபாளையத்தில் பனியன் வேஸ்ட் குடோன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் பனியன் வேஸ்ட் குடோனிலிருந்து தீ கொழுந்துவிட்டு எரிந்து புகை பரவியுள்ளது.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இரண்டு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பனியன் வேஸ்ட் குடோன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பனியன் துணிகள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அவினாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News