ஈரோடு: ஆட்டுக்கு தீவனம் தேடி காட்டுக்குள் சென்ற முதியவருக்கு நேர்ந்த விபரீதம்

பர்கூர் மலைப்பகுதியில் ஆட்டுக்கு தீவனம் தேடிச் சென்ற முதியவரை கரடி தாக்கியதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சோளகனை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ஈரையன் (55), என்பவர் அங்குள்ள வனப்பகுதிக்குள் ஆடுகளுக்கு தீவனம் சேகரிக்கச் சென்றுள்ளார். பின்னர், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரைத்தேடி உறவினர்கள் வனப்பகுதிக்குள் சென்றனர்.

image

அப்போது அங்கு ஈரையன் தலைப்பகுதி மற்றும் கண்கள் உள்ளிட்ட பகுதிகளில் மிக கடுமையாக கரடியால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை தொட்டில் கட்டி கிராமத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post