வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25-ம் தேதி தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது தற்போது வழிமமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் வழி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரிக்கடல் மன்னார் வளைகுடா இலங்கையை ஒட்டியுள்ள கடற்பகுதிகள் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 40-முதல் 50-கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவே மீனவர்கள் 9-ம் தேதிக்குள் கரை திரும்பவும் 10, 11, 12-ம் தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்தது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு ஆழ் கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில், குளச்சல், முட்டம், மண்டைக்காடு, குறும்பனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்லாத நிலையில் படகுகள் பாதுகாப்பாக கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.