செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் 2 ஆயிரம் கனஅடி நீர்

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றும் தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் நேற்று முன்தினம் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மழை அதிகரிது ஏரிக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக உயர்ந்த நிலையில், உபரி நீர் திறப்பு 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.

image

இந்நிலையில், நேற்று இரவு முதல் மழை நின்றதை அடுத்து ஏரிக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 2840 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலுமாக மழை நின்றும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது




As the northeast monsoon intensifies in Tamil Nadu, heavy rains are expected in various districts including Chennai, Tiruvallur and Kanchipuram. Due to this, the water level of Sembarambakkam Lake increased and 500 cubic feet of water was opened yesterday.

At this point the rainfall increased and the amount of water coming into the lake rose to 2,000 cubic feet, while the excess water opening was raised to 2,000 cubic feet.

In this case, the amount of water coming into the lake gradually decreased after the first rain stopped last night. As of this morning, 250 cubic feet of water is coming into Sembarambakkam Lake every second.

Similarly, the total capacity of the lake is 3645 million cubic feet with a water reserve of 2840 million cubic feet. As a precautionary measure, 2,000 cubic feet of water per second is being discharged from Sembarambakkam Lake following the complete cessation of rains in the Sembarambakkam catchment area.

Post a Comment

Previous Post Next Post