தஞ்சை: கனமழை காரணமாக அடியோடு சாய்ந்து விழுந்த நூற்றாண்டுகால பழமையான ஆலமரம்

தஞ்சாவூரில் நூற்றாண்டு பழமையான ஆலமரம் சாய்ந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

தஞ்சை புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த இந்த ஆலமரம், கோடைக்காலத்தில் பலருக்கும் நிழல் தந்தது. ஆலமரத்தடி பேருந்து நிறுத்தம் என பெயர்சூட்டும் அளவுக்கு பிரசித்திப்பெற்ற இந்த ஆலமரம், தொடர் மழை காரணமாக வேரோடு சாய்ந்தது. மரம் விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி: கடலூர்: பறவை இனத்தை பாதுகாக்க பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் கிராமம்

image

தேநீர் கடை ஒன்றும் 2 இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. சாலை விரிவாக்கத்தின்போது ஆலமரத்தின் ஒரு பக்கத்தில் வேர்கள், கிளைகள் அகற்றப்பட்டதே மரம் கீழே விழ முக்கிய காரணம் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post