
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
தேவதானம் - சாஸ்தா கோயில் வனப்பகுதிக்கு உட்பட்ட இடத்தில் காட்டு யானையின் உடல் கிடந்ததை அறிந்த வனத்துறையினர், அங்கு ஆய்வு நடத்தினர். சுமார் 25 வயதான அந்த ஆண் யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது பரிசோதனையில் தெரியவந்தது.

யானையின் இதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறினர். உடற்கூராய்வுக்குப் பின் யானையின் உடல் அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்தி: கோவை: மர்மமாக உயிரிழந்த காட்டு யானை; தந்தங்கள் வெட்டியெடுப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News