கன்னியாகுமரி மாவட்டம் மண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாசி கொடைவிழாவில் தீவட்டி ஊர்வலம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற மண்டைகாடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் மாசிகொடை விழா கடந்த மாதம் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து கடந்த 4-ஆம் தேதி வலியபடுக்கை பூஜை, தொடர்ந்து நடந்த விழா நாட்களில் பொங்கல் வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது.
ஒன்பதாவது நாளான நேற்றிரவு மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய தீவட்டி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இரவு நடந்த இந்த ஐதீக விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்து வந்திருந்த ஏரளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கொடை விழாவை முன்னிட்டு இன்று (08.03.2022) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News