நாகை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு; அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தை

நாகை அருகே, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில கணவன் உயிரிழந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வடவூர் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (40). விவசாய கூலி வேலை செய்து வரும் இவர், தனது மனைவி ஜான்சிராணி மற்றும் மகள் கனிஷ்கா ஆகியோருடன் கூரை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், மூவரும் வீட்டில் இருந்தபோது திடீரென வீட்டின் சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்துள்ளது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, பார்த்தபோது மாடசாமி மற்றும் ஜான்சி ராணி ஆகியோர் பலத்த காயங்களோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

image

இதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், மாடசாமி சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்த நிலையில், ஜானசிராணி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கனிஷ்கா காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வீட்டு சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post