டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்திகள், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 23 நாட்களில் 2 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ள அலங்கார ஊர்திகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சென்று வந்துள்ள இந்த அலங்கார ஊர்திகள் இன்று முதல் பிப்ரவரி 22ஆம் தேதிவரை மெரினா கடற்கரையில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. இதனை பொதுமக்கள் இன்று முதல் பார்வையிடலாம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News