திண்டுக்கல் அருகே மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரின் மகள் நிவேதா. இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பால்ராஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெளியே சென்றிருந்த நிலையில், நிவேதா கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைகான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News