சென்னை: சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை மாதவரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த காமராஜ் என்பவர், தமது காரில் மூலக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, மாதவரம் காவல் நிலையம் அருகே சென்றபோது காரில் இருந்து புகை வருவதை கண்ட காமராஜ், காரில் இருந்து உடனடியாக கீழே இறங்கினார். இறங்கிய சில நிமிடங்களிலேயே கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. 

image

இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post