கிறிஸ்துமஸ் பண்டிகை: திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இன்று கூட்டம் அதிகமாக வர துவங்கியது. இதன் ஒரு பகுதியாக குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் அதிகமாக குவியத் துவங்கினர்.

image

இந்நிலையில், தமிழகம், கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், இங்குள்ள அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்து ரசித்தனர். இங்குள்ள நீச்சல் குளம் பழுதடைந்து கிடப்பதால் வருத்தமடைந்த சுற்றுலா பயணிகள், பழுதடைந்த நீச்சல் குளத்தை சீர்செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post