”உதயநிதி அமைச்சராக வர வேண்டும்: அவரது திறமை தொகுதியுடன் சுருங்கிவிடக்கூடாது”-அன்பில் மகேஷ்-"Udayanidhi should become a minister: his talent should not shrink with the constituency" - Anil Mahesh

”உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும்” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

திமுக எம்எல்ஏவும், இளைஞர் அணியின் மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2000 பேருக்கு அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, அன்பில் மகேஷ் நிவாரண பொருட்கள் வழங்கினர். அப்போது பேசிய, அன்பில் மகேஷ் ”கடந்த கால எம்எல்ஏகள் தொகுதி மக்களை பார்க்கவில்லை. அமைச்சர்களுக்கு எல்லாம் ரோல் மாடலாக இருப்பவர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிகேணி தொகுதியில் மட்டும் சொந்தம் கொண்டாடமல் 234 தொகுதிகளிலும் சொந்தம் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் அவர் பொறுப்புக்கு வர வேண்டும்.

image

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும். இது எனது விருப்பம் மட்டுமல்ல. சேப்பாக்கம் தொகுதி மக்கள் உள்ளிட்ட பலரது விருப்பம். மக்களுக்காக உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதியுடன் சுருங்கி விடக்கூடாது” என்று கூறியுள்ளார்.


 

Wondershare Software

Post a Comment

Previous Post Next Post