சாலை வசதி இல்லை: வெள்ள நீரில் இறந்தவரின் சடலத்தை கயிறுகட்டி எடுத்துச் செல்லும் அவலம்

மேலூர் அருகே வெள்ளநீரில் கயிறுகட்டி இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம் உள்ளது. இதே நிலை பல ஆண்டுகளாக தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வஞ்சிநகரம் அருகே கண்டுகபட்டி என்ற கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இக்கிராமத்திற்குச் சொந்தமான பொது மயானத்திற்கு மழை காலங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.

image

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்த முதியவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல முடியாததால் நீர்வரத்து குறையும் வரை இரு நாட்களாக சடலத்தை ஊரின் மையத்தில் வைத்து காத்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று மாலை வரை காத்திருந்து கழுத்தளவு வெள்ள நீரில் முதியவரின் உடலை கயிற்றால் கட்டி தூக்கிச் சென்றனர். ஆண்டு தோறும் இந்த அவலத்தை சந்திப்பதாக தெரிவித்த கிராம மக்கள் உடலை எரிப்பதற்கு மட்டுமின்றி விவசாய நிலங்களுக்குச் செல்லும் போதும் உயிரை பணயம் வைத்து செல்வதாக வேதனை தெரிவித்தனர்.


 

Wondershare Software

Post a Comment

Previous Post Next Post