சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி உயர் நீதிமன்ற ஆவின் நுழைவுவாயில் அருகே வழக்கறிஞர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், சி.விஜயகுமார், மில்ட்டன், கு.பாரதி உள்ளிடோர் இதில் பங்கேற்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யும் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு, தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறுகையில், “கொலிஜியத்தின் முடிவை எதிர்த்து செல்வது சரியல்ல. அதையும் மீறி ‘ஏன் பணி மாற்றம் செய்ய உள்ளீர்கள்’ என்ற காரணத்தை கேட்டால் அவர்கள் எவ்வளவோ காரணத்தை தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது" என கூறினார்.
தொடர்புடைய செய்தி: ”கொலிஜியத்தின் முடிவை எதிர்ப்பது சரியல்ல”- ஓய்வு பெற்ற நீதிபதி கற்பகவிநாயகம் பேட்டி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News