சாய ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த கொடூரம்-Workers who cleaned the septic tank of a dye plant were brutally beaten

திருப்பூர் அருகே சாய ஆலை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் உள்ள பேன்டோன் டையர்ஸ் என்ற சாய ஆலையில் ராமகிருஷ்ணன், வடிவேல், நாகராஜ் ஆகிய 3 பேர், சாய ஆலை கழிவு தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வடிவேலு என்ற நபருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே உள்ளே இருந்தவர்கள் சத்தம் போட்டவுடன் வெளியில் இருந்த தினேஷ் என்பவரும், ராஜேந்திரன் என்பவரும் காப்பாற்ற சென்றுள்ளனர். இதில், விஷவாயு தாக்கி வடிவேலும் காப்பாற்றச் சென்ற தினேஷும் உயிரிழந்தனர்.

image

நாகராஜ், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகிய 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருந்த நிலையில், உயிரை பணயம் வைத்து தொட்டிக்குள் இறங்கி 3 பேரை தீயணைப்பு வீரர் பாண்டீஸ்வரன் காப்பாற்றியுள்ளார். போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த தலைமையிலான போலீசார், சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இறந்தவர்களின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜேந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

image

மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சாய ஆலையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குனர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விபரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post