ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை சிறை பிடித்த கல்லூரி மாணவர்கள், போதிய பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்யார் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஆரணியில் இருந்து செய்யார் பகுதிக்கு தினந்தோறும் ஒரேயொரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது.
இதனால், மாணவ மாணவியர் சரியான நேரத்திற்கு கல்லூரிக்குச் செல்ல முடியாமல் கல்லூரி முதல்வரின் கோபத்திற்கு ஆளாகி, பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, ஆரணியில் இருந்து செய்யார் செல்லுவதற்கு சரியான நேரத்தில் மாணவர்களுக்கு போதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்தனர்.
Tags:
News