![](https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2021/11/22/800x400/137974.webp)
கோவை, திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக அரசு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இன்று காலை விமானம் மூலமாக கோவைக்கு வருகை புரிந்த அவர், வ.உ.சி மைதானத்தில் ரூ.441.76 கோடி மதிப்பில் 23,534 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.596 கோடி மதிப்பில் 67 புதிய பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார். ரூ.89.73 கோடி செலவில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். இதற்கான துவக்கவிழா தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பாகுபாடின்றி சேவையாற்றுகிறோம். ஆட்சியை அமைத்த அன்றே உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தனித்துறையை உருவாக்கினோம். லட்சக்கணக்கான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிறைவேற்ற முடியாத மனுக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்றும் வழி நெடுகிலும் என்னிடம் மனு அளிக்கப்படுகிறது. மிகப்பெரிய திட்டங்கள் போட்டாலும் தனிநபர் கோரிக்கை சார்ந்த மனுக்களை நிறைவேற்றுவது முக்கியம். கோவையில் கடந்த பத்து ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சி காலத்தில் திட்ட சாலை பணிகள் மேற்கொள்ளவில்லை. மீண்டும் திட்ட சாலைகள் மேம்படுத்த உதவி செய்யப்படும். மாநகரில் உள்ள சிறைசாலை புறநகருக்கு கொண்டு செல்லப்படும். காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்” எனப் பேசினார்.
![image](https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1637567160329.jpeg)
இன்று மாலை திருப்பூர் செல்லவிருக்கும் முதல்வர் அங்கும் இதுபோன்ற நலத்திட்டங்களை துவக்கிவைக்க இருக்கிறார். முதல்வருடன் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களும் விழாவில் பங்கேற்றுள்ளனர். மேலும் திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
In Coimbatore, Tirupur, Chief Minister MK Stalin attended a two-day tour of government welfare programs.
Arriving in Coimbatore by air this morning, he handed over welfare assistance worth Rs 441.76 crore to 23,534 people at the WAC ground. The Chief Minister today laid the foundation stone for 67 new projects worth Rs 596 crore. Launches completed projects at a cost of Rs 89.73 crore for public use. The opening ceremony is currently underway.
Speaking on the occasion, Chief Minister Stalin said, “We serve without discrimination. On the day the regime was formed, we created a separate department of the Chief Minister in your constituency. Action has been taken on millions of petitions. At the same time explanations are being given for petitions that cannot be fulfilled.
The petition is still being petitioned to me along the way today. It is important to fulfill individual request petitions even when large projects are put in place. Funds have been allocated for the expansion of the airport in Coimbatore, which has been pending for the last ten years. Steps will be taken to provide balanced drinking water to the Corporation of Coimbatore.
The project did not carry out road works during the last regime. The project will again help to improve roads. The prison in the city will be moved to the suburbs. A classical park will be set up in Gandhipuram. ”
The Chief Minister who is going to Tiruppur this evening is going to launch similar welfare schemes there as well. The Chief Minister and the respective Ministers of the respective departments also participated in the function. DMK district administrators and government officials also participated.