சபரிமலையில் ஓராண்டுக்கு பின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி-Devotional music show in Sabarimala after one year

கொரோனா பாதிப்பு குறைந்ததால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓராண்டுக்கு பிறகு பக்தி இன்னிசை நிகழ்ச்சி தொடங்கியது.
 
சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்களை பக்தி பரவசப்படுத்தும் வகையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் இருந்ததால் குறைவான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது கேரளாவில் கொரோனா குறைந்திருப்பதால் பூஜை காலங்களில் சபரிமலை சன்னிதான அரங்கில் மாலை வேளைகளில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது பக்தர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post