சாலை வசதி இல்லாததால் முழங்கால் அளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச் செல்லும் அவலம்-deep water due to lack of road facilities

மணப்பாறை அருகே முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி எடுத்து சென்ற மூதாட்டியின் சடலம் பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மணப்பாறையை அடுத்துள்ள சேசலூரில் இருந்து பாலப்பட்டி வழியாக வடக்கு அம்மாபட்டி, தேக்கமலை கோயில் ஆகிய பகுதிகளுக்கு பெரியாறு வாய்க்கால் வழியை தான் பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சரியான தார் சாலை இல்லாததால் ஒற்றையடி பாதை வழியாக கால்வாய்க்கு சென்று, சேறும் சகதியுமான கற்கள் நிறைந்த கரட்டு மேட்டில் ஏறி செல்ல வேண்டும்.

இந்நிலையில், நேற்று உயிரிழந்த பழனிசாமி என்பவரின் மனைவி வெள்ளையம்மாளுக்கு, இறுதி சடங்குகள் செய்ய வந்த உறவினர்களும், ஊர் மக்களும் முழங்கால் அளவு தண்ணீரில் வாய்க்காயை தட்டுத்தடுமாறி சடலத்தை தூக்கிச் சென்றனர். இதுகுறித்து அரசியல் பிரமுகர்களிடமும், ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. இப்பகுதியில் முழுமையான சாலையும், வாய்க்கால் பகுதிக்கு மேம்பாலமும் அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post