சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) பதவியேற்றுக் கொண்டார் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி. சென்னை ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் அவர் தற்போது பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Judge Muneeswar Nath Bandari has been appointed as the Chief Justice (Responsible) of the Chennai High Court. Governor of Tamil Nadu RN Ravi administered the oath of office at the inauguration ceremony held at Raj Bhavan, Chennai. Chief Minister MK Stalin, Leader of the Opposition Edappadi Palanisamy and Deputy Leader of the Opposition O. Panneerselvam were present on the occasion.
Former Chief Justice of the Chennai High Court Sanjeev Banerjee has been transferred to the Meghalaya High Court. In this context, the President issued an order appointing Allahabad ICC Judge Muneeswar Nath Bandari as the Senior Judge and Responsible Chief Justice of the Chennai I Court.
On that basis he is currently in office.
Tags:
News