சென்னையில் 17, 18ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - Chance of heavy rain in Chennai on the 17th and 18th

சென்னையில் வரும் 17 மற்றும் 18ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும். தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்து வட கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை (4.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் காற்றின் திசை மாறும் பகுதி காரணமாக 15.11.2021 தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களுக்கு கனமழை; இந்திய வானிலை மையம் | Dinamalar Tamil News

ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

16.11.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்., ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

17.11.2021,18.11.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தெற்கு அந்தமானில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல் | New depression developing in the southern Andaman tomorrow: Meteorological Center ...

19.11.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): வளவனூர் (விழுப்புரம்) 12, களியல் (கன்னியாகுமரி), கோலியனூர் (விழுப்புரம்) தலா 10, ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), லால்பேட்டை (கடலூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 8, வேப்பூர் (கடலூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), சுருளக்கோடு (கன்னியாகுமரி) பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), விழுப்புரம் (விழுப்புரம்), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 7, மஞ்சளாறு (தஞ்சாவூர்), சிற்றார் (கன்னியாகுமரி), கே.எம்.கோயில் (கடலூர்), கள்ளக்குறிச்சி தலா 6, ஜெயம்கொண்டம் (அரியலூர்), விராலிமலை (புதுக்கோட்டை), வானூர் (விழுப்புரம்), சோலையார் (கோவை), பாடலூர் (பெரம்பலூர்), தென்பரநாடு (திருச்சி), சத்யபாமா பல்கலை (செங்கல்பட்டு) தலா 5, வம்பன் (புதுக்கோட்டை), சிறுகுமணி (திருச்சி), குழித்துறை (கன்னியாகுமரி), பையூர் (கிருஷ்ணகிரி), வாலாஜா (இராணிப்பேட்டை), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பண்ருட்டி (கடலூர்) , இரணியல் (கன்னியாகுமரி), அன்னவாசல் (புதுக்கோட்டை), கொரட்டூர் (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோவை ) தலா 4,

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுகிறது.

15.11.2021: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதியில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

17.11.2021,19.11.2021: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

அரபிக்கடல் பகுதிகள் 15.11.2021: கேரளா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

16.11.2021,17.11.2021: கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post