விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை-Discrimination in awarding accident compensation

பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வேதனை தெரிவித்துள்ளார்.

மரம் விழுந்து இருவேறு விபத்துகளில் பலியான முதியவர், ஆசிரியர் குடும்பத்தினர் சார்பில் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இழப்பீடு வழங்குவது தொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

தனிநபர் விபத்து காப்பீடுகளின் புதிய விதிமுறைகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல் | insurance - hindutamil.in

சிலருக்கு ரூ.1 கோடி வரையும், சிலருக்கு ரூ.1 லட்சம் எனவும் இழப்பீடு வழங்கப்படுகிறது எனவும் பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வேதனை தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post