
மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேச இருப்பதாக வெளியான செய்திகள் மூலம், நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால அதிமுக அரசு போல் ஆளுநரின் அத்துமீறல்களுக்கு இடமளிக்காமல், மாநில உரிமைகளை பாதுகாக்க திமுக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News