
சூளகிரி அருகே குட்டையில் மூழ்கிய இரண்டு சிறுவர்கள் நீண்டநேர தேடலுக்குப் பிறகு சடலமாக மீட்டகப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள அத்திமுகத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது இரண்டு சிறுவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்று தத்தளித்துள்ளனர். இதைக் கண்ட மற்ற இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கியவர்களின் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தனர்.

இதையடுத்து பேரிகை போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து அங்கு வந்த போலீசார் குட்டையில் மூழ்கியவர்களை தேடினர். பின்னர், நீண்டநேர தேடுதலுக்குப் பிறகு ஷமீர் (14),அசோக் (11) ஆகிய இரண்டு சிறுவர்களை சடலமாக மீட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News