சாலையோரம் நின்றிருந்த லாரியின் மீது மோதி தீப்பிடித்து எரிந்த மினி லாரி: ஒருவர் பலி

சிறுபாக்கம் அருகே இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் மினி லாரி தீப்பிடித்து எரிந்து மினி லாரி உரிமையாளர் உடல் கருகி பலியானார்.

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அடுத்த அரசங்குடி சோதனைச் சாவடி அருகே இன்று காலை நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு சேலம் மார்க்கமாக சென்ற லாரியின் ஓட்டுநர் லாரியை சாலையோரம் நிறுத்தியிருந்தார். அப்போது விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினி லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலக்கரி ஏற்றிய லாரியின் பின் பக்கம் வேகமாக மோதியது.

image

இதில், மினி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் பலத்த காயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  உடன் அமர்ந்து வந்த விருத்தாசலம் முல்லா தோட்டத்தைச் சேர்ந்த மினி லாரி உரிமையாளர் ராஜாமுகமது சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார் இதையடுத்து அங்கு வந்த சிறுபாக்கம் போலீசார் மற்றும் வேப்பூர் தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த லாரியை அணைத்து ராஜாமுகமது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post