2028-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 94 போட்டிகள்: பிசிசிஐ தீவிர ஆலோசனை

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2028-ம் ஆண்டு சீசனில் ஆட்டங்களின் எண்ணிக்கையை 74-ல் இருந்து 94 ஆக அதிகரிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

2028-ம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனை 94 போட்டிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து பிசிசிஐ தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதேவேளையில் புதிய அணிகளை சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2022-ம் ஆண்டு சீசனில் புதிதாக குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் அறிமுகமாகின.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post