பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் சென்னையின் எஃப்சி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று (25-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஸ்ரீரா கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு எஃப்சி அணி 21 ஆட்டங்களில் விளையாடி, 10 வெற்றி, 4 டிரா, 7 தோல்விகளுடன் 34 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னையின் எஃப்சி அணி 21 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 டிரா, 9 தோல்விகளுடன 24 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. 6-வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி எஃப்சிக்கும் (32 புள்ளிகள்), சென்னையின் எஃப்சி அணிக்கும் இடையே 8 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post