பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன்

காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் லோகநாதன் (21). இவர் காஞ்சிபுரத்தில் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் இவர், உடற்பயிற்சிக்காக அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று வந்துள்ளார். அங்கு 9 ஆம் வகுப்பு மாணவியுடன் லோகநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

image

இந்த பழக்கத்தை பயன்படுத்திய லோகநாதன், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமாகியிருக்கிறார். இதையறிந்த பெற்றோர், அதிர்ச்சியில் சிறுமியிடம் நடந்ததை விசாரித்துள்ளனர்.

image

அவர் நடந்ததை கூறவே மாணவியின் தாயார் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், லோகநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Post a Comment

Previous Post Next Post