நுரையீரல் தொற்று காரணமாக கனிமொழி எம்.பியின் கணவர் மருத்துவமனையில் அனுமதி

நுரையீரல் தொற்று காரணமாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பியின் கணவர் அரவிந்தன் சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் கணவர் அரவிந்தனுக்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நான்காம் தேதி சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர் பரிசோதனைகளின் மூலம் அரவிந்தனுக்கு நுரையீரல் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து உடல்நிலை சீரானதும் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னை அழைத்துவரப்பட்ட அரவிந்தன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

image

இந்நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அரவிந்தனுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்பாகவும் அவரின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post