ஏடிஎம் இயந்திரந்தை உடைத்து கொள்ளை முயற்சி

வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் ஏடிஎம் இயந்திரந்தை கடப்பாரையால் உடைக்க முயற்சி. ரோந்து பணியில் இருந்த காவலர்களை பார்த்ததும் மர்ம நபர் தப்பியோட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தின் மையப்பகுதியில் தனியார் ஏடிஎம் (இந்தியா 1ஏடிஎம்) இயங்கி வருகிறது.இந்த ஏடிஎம்-ல் நேற்று நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் கடப்பாரையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார்.

image

அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த ஆலங்காயம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை கண்டதும் ஏடிஎம் கொள்ளையில் ஈடுப்பட்டிருந்த மர்ம நபர் கடப்பாரையை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட முயன்று தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

image

இதையடுத்து சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுப்பட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post