ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்காக வாக்கு கேட்க வந்த நாம் தமிழர் கட்சியினரிடம், அருந்ததியர் குறித்து பேசியதற்கு சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் என தடுத்து நிறுத்தி மக்கள் திருப்பி அனுப்பி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் பரப்புரையில் முழுவீச்சாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 44 வார்டு பகுதியான பழைய பூந்துறை சாலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கும் மேனகாவிற்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் நடத்தப்பட்டது.
அப்போது அப்பகுதி மக்கள் நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்தி, "கடந்த 13ஆம் தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில், சீமான் அருந்ததியர் சமூக மக்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர். அருந்ததியரை பற்றி தவறாக பேசிவிட்டு, அருந்ததியர் இருக்கும் பகுதிக்கு எப்படி ஓட்டு கேட்டு வருகின்றீர்கள் எனக்கூறி திருப்பி அனுப்பினர்.
மன்னிப்பு கேட்டுவிட்டு பிறகு பிரச்சாரத்திற்கு வாருங்கள் என கூறியதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதியில் இருந்து திரும்பி சென்றுவிட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News