திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் சினிமாத் துறை பிரபலங்கள் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினர் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நேற்று நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவர் சன்னதி, சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி தட்சிணாமூர்த்தி சூரசம்கார மூர்த்தி ஆகிய சுவாமிகளை தரிசனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News