கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 50 அடியாக உள்ள நிலையில், நேற்றைய நிலவரப்படி 19.5 இருந்தது. இரு மாநில ஒப்பந்தத்தின் படி கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக தினமும் 10 கோடி லிட்டர் கேரளா தர வேண்டியுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மொத்த தேக்க உயரத்தில் 45 அடி வரை மட்டுமே கேரளா அரசு நீரை தேக்குகிறது. மீதமுள்ள தண்ணீரை ஆற்றில் வெளியேற்றுவதால் கோடை காலங்களில் கோவை மாநகராட்சிக்கும் நீர் வழிந்து வரும் பகுதியில் வசிப்பவர்களுக்கும் போது நீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மழை குறைந்துவிட்ட நிலையில் தற்போது அணையில் இரண்டாவது வாழ்வு தெரியும் வகையில் தண்ணீர் குறைந்துள்ளதால் குடிநீர் தேவைக்காக 6.3 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் ஏழு முதல் ஒன்பது நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் விநியோக இடைவெளியும் அதிகரித்துள்ளது. நிலையில் இது தொடர்பாக பேசிய மாநகராட்சி ஆணையர் பிரதாப், கோவை மக்களின் குடிநீர் பற்றாக்குறை போக்க பில்லூர் - 3 குடிநீர் திட்டத்தை குறைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மழை பெய்தால் தான் சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரும் என்பதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News