அறிஞர் அண்ணாவையே மிரண்டுபோக வைத்த கலைஞரின் பேனா பற்றி கைநாட்டுக்கு என்ன தெரியும் என பேனா பற்றிய விமர்சனத்திற்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திமுக சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் பேசியபோது... ஸ்டாலின் அமர்ந்த இடத்தில் இருந்தே இந்தியாவில் முதல் முதலமைச்சர் என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார். கலைஞர் கருணாநிதியை மிஞ்சக்கூடிய ஆற்றல் ஸ்டாலினிடம் உள்ளது.
ஸ்டாலின், இந்தியாவே பாராட்டுகிற, அடிபணிகிற முதலமைச்சராக எதிர்காலத்தில் வருவார். ஸ்டாலினுக்கு மகத்தான வெற்றியையும் பெரும்பான்மையை பெற 75 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறவேண்டும். கலைஞரின் பேனா சாதாரண பேனா அல்ல, மாமேதை அண்ணாவே மிரண்டுபோன பேனா. அந்த பேனாவை பற்றி கைநாட்டுக்கு என்ன தெரியும்?.
இந்த பேனாவிற்கு உயிரோட்டம் உள்ளது. அண்ணாவை பிரம்மிக்க வைத்த பேனா அதனால் தான் அந்த பேனாவை நிறுத்திக் காட்டுகிறோம் என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News