சுங்குவார்சத்திரத்தில் கடையின் முன்பு சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களை காவல் ஆய்வாளர் ரவுடி போல் உடைக்கின்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் செல்லும் மொளச்சூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு முன்பு சாலையை ஆக்கிரமித்து பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் பரந்தாமன் குறிப்பிட்ட இரண்டு கடையை மட்டும் குறி வைத்து கடையின் முன்பு இருந்த பொருட்களை தூக்கி வீசி எறிந்ததோடு, கடையில் இருந்த பெண்களை தரக்குறைவாக பேசியுள்ளார். ஷோகேஸ்களை உடைத்த அவர், சாலையில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி வாடிக்கையாளர்களை விரட்டி ரவுடியை போல நடந்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News