தலைமுடியிலும் தலைவரை பின்பற்றியவன் நான் என்று தனது வழுக்க்கைக்கான காரணத்தை நடிகர் வாகை சந்திரசேகர் விளக்கினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை யொட்டி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கிராமடை பகுதியில் நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், வரும் வழியில் பெண்மணி ஒருவர் எங்கப்பா தலையில முடிய காணோம்னு கேட்டதாக கூறிய அவர், அந்த பெண்மணியின் கேள்விக்கு பரப்புரையின் போது விளக்கமளித்தார்.
வாகை சந்திரசேகர் கொள்கையில் மட்டுமல்ல தலைமுடியிலும் தலைவர் கருணாநிதியை பின்பற்றியதால் இப்படி ஆகிவிட்டது என காமெடியாக தெரிவித்தார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது பானையில் ஒரு பருக்கை கூட இல்லை. சாதம் செய்து பசியாற்ற வேண்டும்;. பெருச்சாலிகளின் ஊழலையும் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் 20 மாத காலமாக முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.
பெரியார், அண்ணா, கருணாநிதி என மூன்று பேரின் ஒரே உருவமாக இருப்பவர் ஸ்டாலின் என்று பேசிய வாகை சந்திரசேகர், ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News